மேல்நோக்கி இலைசுருளுவதற்கான காரணி

From WikiEducator
Jump to: navigation, search

Go Back


மேல்நோக்கி இலை சுருளுவதை “பனிப்பூச்சி” என்ற ஒருவகைப் பூச்சி ஏற்படுத்துகின்றது.

பனிப்பூச்சி எப்படி இருக்கும்?
பனிப்பூச்சியின் வாழ்க்கைவட்டத்தை இங்கே அவதானிக்கலாம். இதில் முட்டை, இரு புழு பருவங்கள், இரு கூட்டுப்புழு பருவங்கள், நிறைவுடலி என நான்கு வளர்ச்சிப்பருவங்கள் உண்டு.

Panipoochchi.jpg
பனிப்பூச்சி எப்படி இருக்கும்?


மேலதிகமாக தெரிந்துகொள்ள விரும்பினால்?


பனிப்பூச்சி எப்போது தாக்கும்?
மிளகாய் நாற்று நடப்பட்டவுடன் பனிப்பூச்சியின் தாக்கம் காணப்படும். நீங்கள் அவதானித்து பார்த்தால் மெல்ல மெல்ல இலை சுருளத்தொடங்குவதிலிருந்து தெரியும்.

நாற்று நடப்பட்டதிலிருந்து எந்த நிலையிலும் பனிப்பூச்சி தாக்கலாம்.

  1)	இலைகள் பெருகி மிளகாய் செடியாகும்போது.
  2)	பூக்க ஆரம்பிக்கும்போது.
  3)	பூக்கள் உருவாகி காய்கள் வந்தபின்.

பனிப்பூச்சி எவ்வாறு தாக்கும்?
இந்த பூச்சி பீடை தாக்குவது எப்படி எனத்தெரிந்தால் இதனை கட்டுப்படுத்துவது சுலபமாகும். இப்பூச்சியில்

    புழு 1
    புழு 2
    நிறைவுடலி பருவங்கள்

என்பன உணவு உருஞ்சும் பருவங்கள். இவற்றின் அதிகமான தாக்கத்தினாலேயே இலை மேலெழுந்து சுருங்கும்.

Thrips1.jpg
புழு 1
Thrips2.jpg
புழு 2
Thrips3.jpg
நிறைவுடலி

மேலதிகமாக தெரிந்துகொள்ள விரும்பினால் ?