Tamil version
கொட்டும் மழையும்
கொட்டுக்களில் நாற்று உற்பத்தியும். எமதுபிரதேசத்தில் போகம்தப்பி பெய்கின்ற கடும் மழையானது விவசாய நடவடிக்கைகளுக்கு சவாலாக இருக்கிறது சேதத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் தடையாக உள்ளது. தற்போது பெய்கின்ற மழையானது போடப்பட்ட மரக்கறி நாற்றுமேடைகளையும் பாகல்,புடோல், பயற்றை,ப+சணி போன்ற பயிர்களின் நாற்றுக்களையும் அதிகஅளவில் சேதப்படுத்தியுள்ளது வயல்நிலங்களில் மரக்கறிச்செய்கையானது தடைப்பட்டிருப்பதால் மரக்கறி;த்தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. விரைவாக மரக்கறி களை உற்பத்தி செய்யநடவடிக்கை எடுக்காவிடின் மரக்கறி தட்டுப்பாட்டுடன் விலையும் அதிகரிக்கும்
மழைதொடர்வதால் மேலும் நாற்றுப்போட இருப்பவர்களை அச்சுறுத்துவதுடன் விதைகளுக்கான தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே இவ்வச்சுறுத்தலிலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் இருக்கின்ற தரமான
விதைகளையும் வினைத்திறனாக பயன்படுத்தி பாரிய விதைத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபடவேண்டிய
தேவையும் ஏற்பட்டுள்ளது.மழைதொடர்வதால் மேலும் நாற்றுப்போட இருப்பவர்களை அச்சுறுத்துவதுடன்
விதைகளுக்கான தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே இவ்வச்சுறுத்தலிலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் இருக்கின்ற
தரமான விதைகளையும் வினைத்திறனாக பயன்படுத்தி பாரிய விதைத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபடவேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
தரமானவிதைகள் விவசாயிகளிடமோ, சந்தையிலோ போதியஅளவில் இல்லை ஆகையினால்
1. இருக்கின்ற விதைகளை சரியாக, சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் 2. மழைக்குமத்தியிலும் நாற்றுக்களை உற்பத்தி செய்யவேண்டும் 3. விரைவாக பயன்பெற வேண்டும். 4. கூடியஅளவு மரக்கறிகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் 5. புதிய வித்துக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இவையனைத்துக்குமான தீர்வுதான் கொள்கலன் நாற்று உற்பத்தி முறையாகும் இம்முறையானது பிறமாவட்டங்களில் பயன்பாட்டில் உள்ளபோதும் எமதுமாவட்டத்தில் இதுவரை பெரியஅளவில் பயன்படுத்தப்படவில்லை. ஆகையால் காலத்தின் தேவையறிந்து இம்முறையை பின்பற்றவேண்டியுள்ளது இம்முறையை பின்பற்றி ஒவ்வொரு விவசாயியும் தனக்குதேவையான நாற்றுக்களை உற்பத்திசெய்யமுடியும் இம்முறையானது கடதாசி, வாழைமடல், பொலித்தீன் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சிறியகொட்டுக்கள், ஐஸ்கிரீம்கப், சிரட்டை போன்ற சிறியபாத்திரங்ளில் மண்ணையும் உக்கியஎரு அல்லது உக்கியகுப்பையையும் கலந்து நிரப்பி அவற்றினுள் வித்துக்களை இட்டு முளைகொள்ளச்செய்து மழைபடாத இடங்களான கொட்டில்கள், தாழ்வாரம், விறாந்iதை, கூடாரம் போன்றஇடங்களில் பராமரித்து நாற்றுக்களை உருவாக்குதலாகும்
கொள்கலன் மரக்கறி நாற்று உற்பத்தி
நோக்கம்
பாதகமான காலத்திலும் நாற்றுக்களை உற்பத்தி செய்தல். விதைகளை சிக்கனமாக பாவித்தல். தரமான ஆரோக்கியமான நாற்றுக்களை உற்பத்தி செய்தல். போகமற்ற காலங்களிலும் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளல். படுநிலையங்களை குறைத்தல். காலநிலை சீரில்லாதவிடத்து காலம்தாழ்த்தி நடமுடியும். விரைவாக உற்பத்தியை பெறல். அதிக விளைவு பெறல்.
தேவையான பொருட்கள் - 1. கொள்கலன்கள் 2. ஊடகம் 3. விதைகள் கொள்கலன்களாக பயன்படுத்தக்கூடியவை பிரிந்தழியக் கூடியவை - வாழைநார், கடதாசி பிரிந்தழிய முடியாதவை – பிளாஸ்ரிக்கப், பொலித்தீன், சிரட்டை ஊடகம் - மேல் மண் 50 மூ உக்கிய கூட்டெரு அல்லது எரு 50 மூ செய்முறை விளக்கம் ஊடகம் தயார் செய்தல் மேல்மண் அரித்தல் உக்கியஎரு அரித்தல் கலத்தல்- மேல்மண்:உக்கியஎரு - 1:1 கொள்கலன்களை தயார் செய்தல் ஊடகம் கொள்கலனில் இடல் விதையிடல்