My Article
கறிமுருங்கைச் செய்கை
Moringaceae குடும்பத்தைச் சேர்ந்த பயிராகும். இதில் 13 இனங்கள் உண்டு. Moringa olifera என்பது பிரபல்யம் வாய்ந்த முருங்கை இனமாகும். இதன் தோற்றுவாய் இந்தியாவாக இருந்த போதிலும் இலங்கை உட்பட பல நாடுகளிலும் தற்போது இவ்வினம் பயிரிடப்பட்டு வருகின்றது. இதற்கு பல வகையான பெயர்கள் உண்டு. தாய்மார்கள் தம் குழந்தைகளிற்கு இதனை சமைத்து ஊட்டுவதனால் தாய்மார்களின் நண்பி எனவும் அழைக்கப்படுகின்றது.
முருங்கையின் இலை, காய், விதை என்பன ப+ரண ஊட்டத்தை வழங்கக்கூடிய உணவாக சமைத்து உண்ணப்படுகின்றது. அத்துடன் இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு தாவர வளர்ச்சி ஓமோனாக பயன்படுத்தப்படும். விதைகளில் இருந்து எண்ணையும் தயாரிக்கப்படுகின்றது.
இலைகளின் பயன்பாடு
- கீரை வகையை சேர்ந்தது, ஆனால் போசணை வகையில் வேறுபட்டது.
- இவ்விலைகளில் மிகை புரதம், விற்றமின்கள், கனியுப்புக்கள்,மாப்பொருள், கொழுப்பு என்பன காணப்படுகின்றது. விற்றமின் E அதிகளவு கொண்டவை, சமைக்காத இலையில் விற்றமின் Cஉம் அதிகளவு உண்டு.
- கனியுப்புக்களில் இரும்பு, கல்சியம், பொஸ்பரஸ் என்பன காணப்படுகின்றது.
- அதிகளவு இரும்பு கொண்டமையால் குருதிச்சோகை எதிர்ப்பு உணவாக
வைத்தியர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
- கந்தகம் கொண்ட அமினோ அமினங்களான மெதியோனின், சிஸ்ரின் என்பனவும் காணப்படுகின்றது.
- சிறுவர்கள், கர்ப்பவதிகளின் மந்த போசணையை நிவர்த்தி செய்யும் தன்மை இவ்விலைக்கு உண்டு.
- இவ்விலைகள் உணவுத்தேவைக்கு மட்டுமன்றி தாவர வளர்ச்சி ஓமோனாக, பசுந்தாட்பசளையாக, கால்நடை உணவாக பயன்படுத்தப்படுகின்றது
தாவர வளர்ச்சி ஓமோன் முருங்கை இலையில் இருந்து பெறப்பட்ட சாறானது தாவர வளர்ச்சி ஓமோனாக பயன்படக்கூடியது. இது தாவரங்களின் உற்பத்தி விளைவை 25-30மூ வரை கூட்டக்கூடிய வலிமை உடையது. பின்வரும் பயிர்களிற்கு இச்சாற்றை விசிறி தெளிப்பதன் மூலம் விளைவை கூட்ட முடியும். உதாரணம் :- வெங்காயம், சோளம், கோப்பி, மிளகாய்
முருங்கை இலைச்சாறு தயாரிக்கும் முறை
- இளம் இலை கொண்ட கிளையையும் (40 நாட்களிற்கு குறைவான வயது);, நீரையும் சேர்த்து அரைத்தல். அதாவது 10 கிலோகிராம் இலைக்கு 1 லீற்றர் நீர் சேர்த்து அரைத்தல் வேண்டும்.
- துணியால் வடித்தல்
இதில் திரவப்பகுதி ஓமோன் கொண்ட கலவையாகவும், திண்மப்பகுதி 12-14மூ புரதம் கொண்ட கால்நடை உணவாகவும் காணப்படும்.
- திரவப்பகுதியின் ஒரு பங்கிற்கு 32 பங்கு நீர் சேர்த்து ஐதாக்கி உடனடியாக விசிறல் வேண்டும்.
- ஐந்து மணித்தியாலங்களிற்கு மேலாக உபயோகிக்க முடியாவிடின் உடனடியாக குளிரூட்டியில் சேமித்து பின் விசிறலாம்.
பசுந்தாட்பசளையாக பயன்படுத்தல்
- மண்ணின் வளத்தை கூட்டுவதற்கு பயன்படு;ம்
- இச்செயற்பாட்டிற்காக தரை முதலில் உழப்படும்
- முருங்கை விதைகள் 2உஅ ஆழத்தில் 10உஅ நீளம், 10உஅ அகல இடைவெளியில் இடப்படும்
- 25 நாட்கள் முளைக்க விடப்படும்
- 25ம் நாள் 15உஅ ஆழம் வரை கொத்தி புரட்டப்படும்
கால்நடை உணவாக பயன்படுத்தல் முருங்கை இலைகள் பால் தரும் மாடுகள்,இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகள், பன்றிகளின் உணவாகவும், கோழித்தீவனமாகவும் பயன்படக்கூடியது. கால்நடை உணவுகளில் 40-50மூ வரை இவ்விலைகள் சேர்க்கப்படும். இவ்வுணவால் 30மூ இற்கும் அதிகளவான பாலையோ அன்றி இறைச்சியையோ பெற்றுக் கொள்ளலாம்.
2. காய் (PODS) முருங்கைக்காய் என அழைக்கப்படுகின்றது. எல்லோராலும் சமையலுக்காக விரும்பி வாங்கப்படும் மரக்கறி ஆகும். பச்சையாகவும், தகரத்தில் அடைத்தும் சந்தைப்படுத்தப்படுகின்றது. இலங்கை, இந்தியா, கென்யாவில் இருந்து ஐரோப்பாவிற்கும் ஏனைய ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யயப்படுகின்றது.
3. விதை பச்சை விதைகளை அவித்தோ அல்லது பொரித்தோ சாப்பிட முடியும். முதிர்ந்த விதைகள் ஏறத்தாழ 40மூ எண்ணையைக் கொண்டவை. இந்த முருங்கை விதை எண்ணை ஓர் தரமான உற்பத்திப் பொருளாகும். 73மூ ழுடநiஉ யஉனை கொண்டது. இதனால் ஒலிவ் எண்ணை ஒத்த இயல்புடையது, பழுதடையும் திறன் குறைந்தது. இது பின்வரும் தேவைகளிற்கு பயன்படும்.
சமையல் தேவை நறுமண திரவியங்களின் உற்பத்தி மணிக்கூடுகளில் உராய்வு நீக்கியாக பயன்படும் சவர்க்காரம் தயாரிப்பு முருங்கை விதை எண்ணை தயாரிப்பு
முருங்கை விதை எண்ணை தயாரிக்கும் முறை இது வீடுகளில் தயாரிக்க முடியும்
முதலில் முதிர்ந்த வித்துக்களை வேறாக்கல் வறுத்தல் தூளாக்கல் 5 நிமி;டங்கள் வரை கொதி நீரில் இடுதல் இதனை வடித்து இரவு முழுவதும் படிய வைத்தல் எண்ணை மிதந்து வர பிரித்து எடுத்தல்
உயிரியற் கொல்லியாக பயன்படுத்தல் முருங்கை இலைகளிலும், வேரிலும் காணப்படும் சேர்வையான Pடநசலபழளிநசஅin ஓர் வலிமையான உயிரியல் கொல்லியாகவும் பங்கசு எதிரியாகவும் செயற்படக்கூடியது.
முருங்கைச் செய்கையின் நன்மைகள்
குறைவான நீர்ப்பாசன வசதியுடன் செய்கை பண்ணலாம் அதிகளவு கூலியாட்கள் தேவையில்லை குறைவான பசளை தேவை சிறிய விவசாயிகள் தாமாகவே சந்தைப்படுத்த முடியும் வெட்டப்பட்ட கிளைகள் வேறுதேவைகளிற்கு பயன்படுகின்றது
முருங்கையின் இன விருத்தி முருங்கையானது விதைகள் மூலமும், தண்டுகள் அல்லது கிளைகள் மூலமும் இலகுவாக பெருக்கப்படக்கூடியவை.
விதைகள் மூலம் நாற்றுக்களைப் பெறுதல்
விதைகள் பொலித்தீன் பைகளில் தனித்தனியாக இட்டு முளைக்க செய்யப்படும். பொலித்தீன் பைகள் அரித்த மேல்மண், கூட்டெரு 1:1 என்ற வீதத்தில் கலக்கப்பட்டு நிரப்பப்படும். பின் பைகளில் துளைகள் ஏற்படுத்தப்பட்டு நீர்ப்பாசனம் செய்யப்படும். விதையானது 2உஅ அல்லது 1உஅ ஆழத்தில் இடப்படும். 1-2 கிழமைகளில் விதைகள் கட்டாயம் முளைக்க வேண்டும். இரு வருடங்களின் பின்பு விதைகள் முளைதிறனை இழந்து விடும்.
தண்டுஃகிளைகளை தெரிவு செய்தல் தண்டுஃகிளையானது 45-100உஅ உயரமானதாக இருத்தல் வேண்டும். அத்துடன் இதன் விட்டமானது 4-10உஅ ஆக இருத்தல் வேண்டும். தண்டுஃகிளையானது வெட்டி 3 நாட்கள் நிழலில் வைத்த பின்பு நடுகை செய்யப்பட வேண்டும்.
நடுகையும் நடுகை காலமும்
முருங்கையில் கிளை வெட்டுத்துண்டங்கள் ஆனி மாதம் தொடக்கம் ஆவணி மாதம் வரை நடுகை செய்யப்படும். இக்காலப்பகுதியில் பருவக்காற்று மழை பெறப்படுவதால் வெட்டுத்துண்டங்கள் இலகுவாக வேர்விட்டு வீரியமான வளர்ச்சியை காட்டும். நடுகையின் போது கிளையின் 1ஃ3 பங்கு குழியினுள் விடப்பட்டு நடுகைசெய்யப்படும். நடுகைக்குழியானது 60 உஅ ஒ 60 உஅ ஒ 60 உஅ ஆகவும் நடுகை இடைவெளி 5 அ ஒ 5 அ இலும் துண்டங்கள் நடப்படும்.
விதைகள் நேரடியாக நடுகைக்குழியின் மத்தியில் இடப்பட்டு நாற்றுக்களை வளர்க்க முடியும். இவ்வாறு நடப்படும் நாற்றுக்கள் விரைவான வளர்ச்சியை காட்டும். இதற்கு பொருத்தமான காலப்பகுதி புரட்டாதி மாதமாகும். இவ்விதைகள் இடப்படும் போதும், நாற்றுக்கள் நடப்படும் போதும் நடுகைக்குழியானது 45 உஅ ஒ 45 உஅ ஒ 45 உஅ இலும், நடுகை இடைவெளி 2.5 அ ஒ 2.5 அ ஆகவும் நடப்படும். இவ்வாறு நடுகை செய்யும் போது ஒரு ஹெக்ரெயரிற்;கு 1600 தாவரங்கள் தேவைப்படும். முருங்கை விதையானது விதைத்து 10 – 12 நாட்களின் பின் முளைக்கும். ஒரு ஹெக்ரெயரிற்கு 625 கிராம் விதை போதுமானது. விதைகளை இட்ட பின் நீர்ப்பாசனம் செய்யப்படல் வேண்டும்.
நடுகைக்கு பின்பான பராமரிப்பு முருங்கை நாற்றானது 75 உஅ உயரம் (விதையிட்டு 2 மாதத்தின் பின்) வந்ததும் முனையரும்பை கிள்ளிவிடுதல் வேண்டும். இதனால் கக்கக்கிளைகளின் வளர்ச்சி தூண்டப்படுவதுடன் மரத்தின் உயரமும் குறைக்கப்படும். இதனால் கடும் காற்றினால் மரங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன் அறுவடை செய்வதும் இலகுவாக்கப்படுகிறது. முருங்கையானது சேதனப்பசளை பாவனை இன்றி வெற்றிகரமாக செய்கைபண்ணக்கூடிய பயிராகும். அசேதனப்பசளை பாவிப்பதாயின் 44 : 16 : 30 கிராம் NPமுஃ மரம் என்ற அளவில் 75ம் நாளில் பாவிக்கலாம். அதாவது முனைஅரும்பு கிள்ளி விடப்படும் போது இச்சேதனப்பசளை இடப்படும். மேற்கட்டுப் பசளையானது முதலாவது பூத்தலின் போது (150 – 160 ம் நாள்) இடப்படும் இதன் போது ஒரு மரத்திற்கு 44 கிராம் நைதரசன் என்னும் அளவில் இடப்படும். சேதனப்பசளை பாவிப்பதனால் முருங்கையின் விளைச்சலை அதிகரிக்க முடியும். இதன் போது முருங்கையின் அடியில் இருந்து 10 செ.மீ தூரத்தில் வளையமான குழி எடுக்கப்படும். இவ்வாறு செய்யும் போது மழைகாலமாக இருத்தல் வேண்டும். குழியானது பச்சை இலைகள், மாட்டெரு, சாம்பல் கொண்டு நிரப்பப்படும். பின் மண்ணினால் குழி மூடப்படும். இம்முறையானது முருங்கைகாய்களின் விளைச்சலை அதிகரிக்க சிறந்ததொரு முறையாகும். வளரும் முருங்கை நாற்றுக்களிற்கு மேலதிகமாக நீர்ப்பாசனம் செய்யக்கூடாது. சூடான காலநிலை நிலவும்போது ஒருவாரத்திற்கு ஒருமுறை நீர்ப்பாசனம் செய்தல் போதுமானது. அத்துடன் முருங்கையானது துளிநீர்ப்பாசனத்தின் கீழும் மேற்கொள்ளப்பட முடியும். இதன் போது ஒரு நாளிற்கு 4 லீற்றர் என்ற வீதத்தில் நீர்ப்பாசனம் செய்யப்படும்.
அடிக்கட்டை பயிரை பராமரித்தல் ஆண்டுக்கு ஒருமுறை காய்க்கும் முருங்கையை பயிரிடும் போது ஒவ்வொரு அறுவடையின் பின்னும் கத்தரித்து அடிக்கட்டை பயிராக பராமரிக்கப்படும். இதன் போது நிலமட்டத்தில் இருந்து ஒருமீற்றரிற்கு மேலாக வெட்டி விடப்படும். பின் இவ் அடிக்கட்டை பயிர் புதிய அரும்புகளை உருவாக்கி 4 – 5 மாதங்களின் பின் பூக்கத் தொடங்கும். முருங்கையில் மூன்று தடவைகள் இவ்வாறு வெட்டுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. முதலாவது தடவை நட்டு 9ம் மாதத்திலும் அடுத்து 17ம், 25ம் மாதத்திலும் செய்யப்படும். ஓவ்வொரு அடிக்கட்டை பயிராக்கல் செயற்பாட்டின் போதும் சிபாரிசு செய்யப்பட்ட நைதரசன், பொசுபரசு, பொட்டாசியம் போசணையும், 20 – 35 கிலோ கிராம் கூட்டெருவும் வழங்கப்படவேண்டும். வருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை மரங்களும் உண்டு. இவை ஐப்பசி, கார்த்திகை மாத காலப்பகுதியில் நிலமட்டத்திலிருந்து 0.3 – 0.45 மீற்றர் உயரத்திற்கு மேல் வெட்டிவிடப்படும். இதற்கு சேதனப்பசளை 25 கிலோகிராம் உம் சிபாரிசு செய்யப்பட்ட NPமு பசளையும் வழங்கப்படல் வேண்டும்.
அறுவடை
வருடத்திற்கு ஒருமுறை காய்க்கும் மரங்களில் இருந்து பொதுவாக முதல் 2 வருடங்களுக்கு 80 – 90 காய்களையே பெறமுடியும். பின் 4, 5 வருடங்களில் இவற்றின் காய்களின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு ஒருமரத்தில் இருந்து 500 – 600 எனும் அளவில் அதிகரித்து செல்லும். காய்களின் அறுவடையானது பங்குனி மாதத்திற்கும் ஆனி மாதத்திற்கும் இடையில் காணப்படும்.
வருடந்தோறும் காய்க்கும் முருங்கையானது விதையிட்டு (புரட்டாதி) 6ம் மாதத்தில் அறுவடையை பெறலாம். காய்கள் தேவையான நீளமும் சுற்றிக் கட்டக்கூடியதாயும் இருக்கும். காய்கள் நார் உருவாக முன் அறுவடை செய்யப்பட வேண்டும். அறுவடைக்காலமானது 2 – 3 மாதங்கள் வரை காணப்படும். ஒவ்வொரு அறுவடையின் போதும் 250 – 400 காய்கள் பெறப்படும். இது முருங்கை இனத்தில் தங்கியுள்ளது.
பூச்சிப்பீடை தாக்கம் :- முருங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ப+ச்சிகளாக பழ ஈ(புவைழயெ னளைவபைஅயவய)இ மயிர்க்கொட்டிகள் என்பன காணப்படுகின்றது. பழ ஈக்கள் காய்கள் விருத்தியாகும் பருவத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த ப+க்கும் பருவத்தில் பென்தியோன் விசிறப்படல் வேண்டும். ப+ச்சி நாசினி பயன்படுத்தப்படாமல் பழ ஈயை கட்டுப்படுத்துவதாயின் வேப்பம் விதைச்சாறு பயன்படுத்த முடியும். (2 லீற்றர்ஃமரம்). இதனை 50மூ ஆன காய்கள் தோன்றும் போது மண்ணிற்கு விசிறுதல் வேண்டும். அத்துடன் ஒவ்வொரு வாரமும் தாக்கப்பட்ட காய்களை அகற்றுவதன் மூலமும் பழ ஈயின் தாக்கத்தை குறைக்க முடியும். முருங்கையில் மயிர்க்கொட்டிகளின் தாக்கம் அதிகளவு காணப்படுகின்றது. இவை இலைகளை உண்பதால் விளைச்சலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மயிர்க்கொட்டிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த குளொரோனபறிபொஸ் எனும் ப+ச்சி நாசினி பயன்படுத்த முடியும். மற்றும் எரித்தல் செயன்முறையினாலும் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.