மாமரச் செய்கை

From WikiEducator
Jump to: navigation, search

மாமரச் செய்கை

முக்கனிகளுள் ஒன்றாகத் திகழும் மா பழங்களின் ராஐh என எல்லோராலும் வர்ணிக்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் தற்போது 704 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்படுகின்றது. மருத்துவ இயல்புகளையும், போசணை உள்ளடக்கங்களையும் மாம்பழம் அதிகளவு கொண்டுள்ளது, மருத்துவ இயல்புகளான மாலைக்கண் நோயைத் தடுப்பதற்கும், வெப்பநிலை அதிகரிப்பால் உடலில் தோன்றும் குறைபாடுகளைத் தவிர்க்கவும் துணை புரிகின்றது. புரதம், கொழுப்பு, காபோவைதரேற்று, ஊய, P, குந, கரோற்றீன், றைபோபிளேவின், நயசின் போன்ற போசணை உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளது,

பொருத்தமான காலநிலை

வருடம் ஒன்றில் 500 – 2500 மி.மீ மழைவீழ்ச்சி இச் செய்கைக்குப் பொருத்தமானது.

சிறந்த முறையில் பூக்கள் உருவாக 3 -4 மாதங்கள் வரை உலர் காலநிலை இருப்பது சிறந்தது.








மண்:- இரண்டு மீற்றர் ஆழமான நன்கு நீர் வடிந்து செல்லக்கூடிய மண் உகந்தது. மண் அமில கார நிலை 5.5- 7.5 சிறந்தது.

நடுகைத் தூரம்:- வர்த்தக ரீதியில் செறிவான மாமரச் செய்கையில் நடுகை இடைவெளியைக் குறைத்து நடுகையை மேற்கொள்ளல் வேண்டும்.

விலாட் இனமாயின் ……….5ஒ5அ
கறுத்தக் கொழும்பான்……..8ஒ8அ

நடுகைக் காலம் :- நடுகைக்கு உகந்நத காலம் ஆனி – ஆடி மாதம்


நடுகைக் குழி தயார் செய்தல்

படிமுறைகள்:-

குழி தயார் செய்தல 3அடி ஒ 3அடி ஒ 3அடி பரிமாணமுள்ள குழியை வெட்டவும் . குழியில் 6 அங்குல உயரத்திற்கு கற்கள் இட்டு இறுக்கவும் . அதன் மேல் 1:1 விகிதத்தில் மேல் மண், கூட்டெரு என்பவற்றைக் கலந்து குழியை நிரப்பவும்.

நிரப்புதல் நடுகை மேற்கொள்ள 2 வாரத்திற்கு முன் குழியை ஊடகத்தால் நிரப்புதல் வேண்டும்.

நடுவதற்கு 3 நாட்கள் முன் குழிக்கு அடிக்கட்டுப் பசளை இட்டு நடுகை செய்தல் வேண்டும்.


நடுகையின் போது கவனிக்க வேண்டியவை

• ஒரு வருட வயதுடைய வீரியமான நேரான ஒட்டுக்கன்றுகளைத் தெரிவுசெய்தல்.

• முதலில் நாற்று நடப்பட்டுள்ள பொலித்தீன் பையைக் கவனமாக வெட்டுதல்





பொலித்தீன் அகற்றல்.

• நாற்றின் ஆணிவேர் அல்லது வேறு வேர்கள் சுருண்டு காணப்படுமாயின் சுருண்ட பகுதியை நட முன்னர் வெட்டி அகற்றுதல் • பொலித்தீன் பையின் உயரத்தின் அரைவாசி உயரத்திற்கு மண்ணால் குழியை மூடவும். இதன் பின் பொலித்தீனை இரு புறமும் இழுத்து வெளியே எடுக்கவும். இதன் பின் மண்ணால் குழியை முற்றாக நிரப்புவும். • நடப்பட்ட நாற்று நேராக வளர வசதி ஏற்படுத்தவும. இதற்கு நாற்றின் அருகே நேரான தடியொன்றை ஊன்றி நாற்றை அதனுடன் சேர்த்துக் கவனமாகக் கட்டவும்.






• மரத்தினைச் சுற்றிக் களைகள் வளர்வதைத் தடுக்கவும், மரத்தின் வேர்களிற்கு அண்மையில் மண் சூடாவதைத் தடுக்கவும் பத்திரக்கலவையிடுதல். • நாற்றினை நட்டபின் கிரமமான முறையில் நீர் ஊற்றவும். • அதிக சூரிய ஒளி என்றால் நிழல் வழங்கவும்.




பசளைப் பாவனை








விதானப் பரப்பின் வெளி விளிம்பிலிருந்து உட்பக்கமாக 2 ½ அடி அகலமுள்ள வட்டப்பரப்பில் பசளையை மண்ணுடன் கலந்து விடல். பின்னர் பத்திரக்கலவை இடல்.

காய்க்கமுன் வருடமொன்றில் மாமரம் ஒன்றிற்கு இடவேண்டிய பசளை அளவு(கிராமில்)

வருடம் யூரியா அடர் சுப்ப பொஸ்பேற் மியூறிNயுற் பொற்றாசு நடும்போது 160 115 90 1ம் வருடம் 160 115 90 காய்க்கும் வரை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்க வேண்டிய அளவு 80 60 45

காய்க்கும் மரங்களிற்கு வருடம் ஒன்றில் மாமரம் ஒன்றிற்கு(கிராமில்)

வருடம் யூரியா அடர் சுப்ப பொஸ்பேற் மியூறிNயுற் பொற்றாசு காய்க்கத்தொடங்கிய வருடத்தில் 215 191 380 வருடம் ஒன்றில் அதிகரிக்க வேண்டிய பசளை அளவு 120 47 260 சில வருடங்களின் பின் மரமொன்றிற்கு இடவேண்டிய ஆகக்கூடியளவு 945 370 2035


நீர்ப்பாசனம்

வரட்சியான பிரதேசங்களில் புதிதாக நடும் போது முதல் 3 வருடம் நீர்;ப்பாசனம் முக்கியமானதாகும். (மழைவீழ்ச்சி, மண்தன்மைக்கேற்ப நீர்ப்பாசனம் வேறுபடும்) பூக்கள் உருவாகி காய்கள் முதிர்ச்சி அடையும் வரையும், இளம் தளிர்களில் இருந்து முற்றிய இலை உருவாகும் வரை சரியான அளவு ஈரப்பதன் அவசியம். இலை முதிர்ச்சியடைந்த பின் பூக்கள் உருவாகும் வரை மரங்களிற்கு நீர்ப்பாசனம் செய்ய வேண்டியதில்லை. இக்காலத்தில் நீர்ப்பாசனம் செய்வதால் பூக்கள் உருவாவது தடைப்படும்.

கத்தரித்தலும் பயிற்றுவித்தலும்

நோக்கம் • சுpறந்த தரமான பழங்களைப் பெறல் • சிறந்த தோற்றத்தை வழங்கல் • இலகுவாக பராமரித்தல் • நோய் பீடைத்தாக்கத்தைக் குறைத்தல்

ஒரு பழமரத்திலிருந்து உச்ச பயனைப்பெற மரத்திற்கு குறைந்தது 5-6 மணித்தியால சூரியயொளியாவது கிடைக்க வேண்டும். எனவே பழமரங்களிலிருந்து உச்ச பயனைப் பெறுவதற்கு அவற்றை கத்தரித்து வடிவமைத்தல் அவசியம்.

மையமுறையிலான திறந்த முறைக் கத்தரிப்பு

படிமுறைகள்


• 2-3 அடி வரை மரத்தினை நேராக வளரவிடல். 3 அடி உயரத்தில் நுனி அரும்பினை சேதப்படுத்தல்.


• வேவ்வேறு திசைகளில் (120°) 3-4 கிளைகளை வளரவிடல். கிளைகளை 45° சரிவாகக் கட்டவும். மேல்நோக்கிய உள்நோக்கிய ஒளி கிடைக்காத கிளைகளை அகற்றல்.வீரியமான கிளைகளை தெரிந்துவிடல்

• ஓவ்வொரு கிளைகளிலும் வீரியமானதும் நலிந்த கிளையையும் அகற்றிவிட்டு நடுத்தரமான 2 கிளைகளை விடவும். • இதன் பின் ஒவ்வொரு கிளைக்கும் மேற்குறிப்பிட்டது போல் இரண்டு கிளைகளை மட்டும் விடவும்.

• வடிவமைத்த மரத்தின் தோற்றம் குடைபோன்ற அமைப்பாக காணப்படும்.

• தொடர்ந்த இலைகள் இல்லாமல் இடைஇடையே ஒளி போகக்கூடியதாக கத்தரித்தல் செய்யப்படல் வேண்டும்.

பூச்சிகளும் நோய்களும்

மாவிலைத்தத்தி

மாவிலைத்தத்தியே முக்கிய பீடையாகும். இச்சிறிய பூச்சிகள் பூந்துணர்களையும் மெல்லிய கிடைகளையும் தாக்கி அவற்றில் உலர்தலையும் சுருங்கலையும் ஏற்படுத்துகின்றன. இலைகளில் இப் பூச்சிகளால் சுரக்கப்படும் வெல்லத்தன்மையுடைய கரைசலில் வளர்ந்து காணப்படும். கரிய புகைபோன்ற கருந்தூள் பங்கசுக்களில் இருந்து இப்பூச்சிகளின் இருக்கையை அறியலாம்.

இதனை முகாமைத்துவப்படுத்த புகையூட்டல் சிறந்த முறையாகும். அதிக தாக்கமாயின் பென்தியோன் 50மூ செ.கு. 30 மி.லீற்றரை 10 லீற்றர் நீரில் கலந்து மரமொன்றின் தளர்களிற்கும் பூக்களுக்கும் (விரியமுன்னர்) விசிறவும். அல்லது டைமிதியோற் 30 மி.லீற்றரை 10 லீற்றர் நீருடன் கலந்து விசிறவும்.



பழ ஈ

பெண் பூச்சி மாங்காயில் தோலைத் துளைத்து முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் குடம்பி பழத்தின் சதையை உணவாக உட்கொள்ளும் . இதனால் சதை நீர்த்தன்மையாக மாறுவதுடன் மாங்காயை அழுகச்செய்யும். பாதிக்கப்பட்ட காயின் மேற்ப்புறம் கபில நிறமாக காணப்படுவதுடன் காய்கள் விரைவில் உதிரும்.

முகாமைத்துவம்

பீடைகளை அழிப்பதற்கு பியூடறான் பொறிகளை பாவித்தல். மா பூக்கத்தொடங்கியது முதல் அறுவடை செய்யும் வரை இப்பொறிகளை வைத்தல் வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 பொறிகள் வைத்தல் வேண்டும்.

பூச்சியால் பாதிக்கப்பட்ட உதிர்ந்த காய்களை பொறிக்கி அழித்தல் மூலம் முகாமைத்துவப்படுத்தலாம்

அறுவடை

மாம்பழங்கள் அவை பழுக்க முன்னர் பிடுங்க வேண்டும். நன்கு முற்றிய மாங்காய்கள் தெளிவான சாம்பல் நிறத்தையும், சுண்டும்பொழுது மென்மையான சத்தத்தையும் கொடுக்கின்றன. மாம்பழங்கள் பிடுங்கும் பொழுது நிலத்தில் விழாதவாறு கவனமெடுத்தல் வேண்டும். எனவே நீண்ட தடியொன்றிற்கு வளைந்த கத்தி அல்லது கொழுக்கி கட்டப்பட்டு , பழங்கள் விழும் போது அவற்றை ஏந்த கூடையொன்று இணைக்க வேண்டும்.