My artical

From WikiEducator
Jump to: navigation, search

பிரதிவிவசாயப்பணிப்பாளர்(விரி) அலுவலகம், யாழ்ப்பாணம்

தாவரப் பீடை நாசினிகள் தாவரப்பீடைநாசினி என்பது இயற்கையாக கிடைக்கும் தாவரபகுதிகளில் இருந்து சூழலை மாசுபடுத்தாது எமது பயிருக்கு சேதம் விளைவிக்கும் பீடைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுவது. இவற்றை மாலை நேரங்களில் விசிறுவதே உகந்தது. தாவரப் பீடைநாசினிகளின் நன்மைகள் 1. செலவு குறைந்தவை. 2. இலகுவில் எப்பொழுதும் கிடைக்கும் 3. பக்க விளைவு அற்றவை. 4. சூழலுக்கு பாதிப்பு அற்றவை 5. நன்மை செய்யும் பூச்சிகளுக்கு பாதுகாப்பானவை. 6. பண்ணை விலங்கு, பறவைகளுக்கு பாதிப்பற்றவை. 7. தெளிகருவி இன்றியும் தெளிக்கலாம் தாவர பீடைநாசினிகளாக பயன்படுத்தப்படுபவை 1. வேம்பு • இலை • விதை – பருப்பு, வேப்பெண்ணெய், வேப்பம் பிண்ணாக்கு • பட்டை 2. கோசலம் 3. கோமயம் 4. நொச்சி 5. எருக்கலை 6. பாவட்டை 7. ஆடாதோடை 8. ஆமணக்கு 9. கிளிசீரிடியா 10. உள்ளி 11. மிளகாய்தூள் 12. தக்காளி 13. பப்பாசி 14. இஞ்சி


வேப்பம் இலை கரைசல் • ஒரு கிலோ கிராம் வேப்பம் இலையை 05 லீற்றர் நீரில் இட்டு 20 நிமிடங்கள் (இலை மஞ்சள்நிறமாகும் வரை) அவிக்க வேண்டும். • சூடு ஆறிய பின் வடித்து 10 கிராம் சவர்க்காரக்கரைசலுடன் கலந்து விசிறவும். வேப்பம் பருப்பு கரைசல் 1 லீற் வேப்பம் பருப்பு கரைசல் தயாரிக்க தேவையான வேப்பம் பருப்பின் அளவு சேமிக்கும் காலத்துடன் அதிகரித்துச்செல்லும். சேமிப்பு காலம் (மாதங்கள்) தேவையான பருப்பு (கிராம்) 1 - 3 20 4 - 6 25 7 - 9 30 10 - 12 35





• சேமிப்பு காலத்தை கருத்தில் கொண்டு தேவையான அளவு வேப்பம் பருப்பை எடுத்து நன்கு இடித்து தூளாக்கவும். • 20 கிராம் எடுத்தால் 1 லீறறர் நீருடன் கலந்து 12 மணித்தியாலங்கள் ஊறவிடவும். • வடித்தெடு;த்து 10 கிராம் சவர்க்கார நீருடன் சேர்த்து வடிதிரவத்திற்கு நீர்- 1 : 4 என்ற அளவில் கலந்து விசிறலாம். • கட்டுப்படுத்தும் திறன் 1. மிகவும் வினைத்திறனான கட்டுப்பாடு (ஏநசல பழழன Pநளவ ஊழவெசழட) • வண்டுகளின் குடம்பிகள் (உ.ம் - எப்பிலக்னா) • இலையரி புழுக்கள் (உ.ம் - கோவா) 2. நல்ல கட்டுப்பாடு (புழழன Pநளவ ஊழவெசழட)

• வெட்டுக்கிளிகள் • இலைசுரங்கமறுப்பிகள் • இலை ஃ தண்டு தந்திகள்

3. சுமாரான கட்டுப்பாடு ( குயசை Pநளவ ஊழவெசழட)

• அழுக்கணவன் • வெண் ஈ • மூட்டுப் பூச்சிகள் • வெண் மூட்டுப் பூச்சிகள் • செதிட் பூச்சிகள்

4. அற்ப கட்டுப்பாடு (Pழழச Pநளவ ஊழவெசழட) • பழ ஈக்கள் (உ.ம் - பூசணி குடும்ப பழ ஈ) • சிலந்திச் சிற்றுண்ணிகள்

வேப்பம் பிண்ணாக்கு • சாக்கில் கட்டி நீர்ப்பாசன வாய்க்காலில் வைக்கவும் • பிண்ணாக்கு நீரில் கரைந்து பாசன நீருடன் செல்லும் • கட்டுப்படுத்தும் பூச்சிகள் – வேரைத்தாக்கும் பூச்சிகள் – விலாங்குப் புழுக்கள் • ஒரு ஏக்கருக்கு 40-60 கி.கி வேப்பம் பிண்ணாக்கை அடியுரமாக இட்டால் பக்ரீறியா, பூஞ்சணநோய்களை கட்டுப்படுத்தலாம்.

வேப்பெண்ணெய் • வேப்பெண்ணெய் - 30 மி.லீ உடன் சவர்க்காரம் - 20 கிராமை ½ லீற்றரினுள், இட்டு இரண்டையும் நன்கு கலக்கவும். • கரைசலுக்கு 131ஃ2 லீற்றர் நீரை கலந்து விசிறவும் • வெயில் நேரங்களில் விசிறும்போது பயற்றை, வெண்டி போன்ற பயிர்கள் பாதிக்கப்படும் • கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள்

• வெண் ஈ • அழுக்கணவன் • செதில் பூச்சி • வெண் மூட்டுப்பூச்சி

உள்ளிக் கரைசல் • 100 கிராம் உள்ளியை நன்கு அரைத்தெடுத்து அதனுள் நீர்- ½ லீற்றர், மரக்கறி எண் - 2 தே.கரண்டி, சவர்க்காரம் - 10 கிராம் இட்டு 12 மணிநேரம் ஊறவிடவேண்டும். • பின் வடித்து 20 லீறறர் நீரில் கலந்து விசிறலாம். • கட்டுப்படுத்தும் பூச்சிகள்

 வண்டுகள்  சிற்றுண்ணிகள்  பனிப்பூச்சி  அழுக்கணவன்  வெண் ஈ  அறக் கொட்டியான்  காய் தண்டு துளைப்பான்கள்


புகையிலைச் சாறு • புகையிலைக் காம்புகளைச் சேகரிக்கவும் • நீரில் ஒரு இரவு (12 மணி) ஊறவிடவும் • கொதிக்க வைத்து ஆறவிடவும் • ஆறிய பின் வடித்து பயிர்களுக்கு விசிறவும் • கட்டுப்படுத்தும் பூச்சிகள் – வெட்டுப் புழுக்கள் – வெண் ஈக்கள்; அன்னாமுன்னாஃ எருக்கலைஃ நொச்சி இலைக்கரைசல் • 1 கிலோ கிராம் இலையை நன்கு இடிக்கவும் • 5 லீற்றர் நீருடன் கலந்து துணியால் வடிகட்டவும் • உடன் விசுறவும் • கட்டுப்படுத்தும் பூச்சிகள்

• அழுக்கணவன் • சிவப்பு பூசணி வண்டு • கோவா புழுக்கள்


தக்காளி கரைசல் • 5 லீற்றர் நீரில் 1 கி.கிராம் இலை, தண்டு ஆகியவற்றை அவித்து சூடு ஆறியபின் வடித்து விசுறவும். • கட்டுப்படுத்தும் பூச்சிகள் • இலையரிபுழுக்கள் • ஈக்கள்

பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி கரைசல்; • தோல் நீக்கிய உள்ளி - 18 கிராம் • பச்சை மிளகாய் - 9 கிராம் • இஞ்சி - 9 கிராம் • உள்ளியை விழுதுபோல் அரைக்கவும் • பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து அரைக்கவும் • வடிகட்டவும் • 500 மி.லீ கரைசலுக்கு 100 மி.லீ சவர்க்காரக் கரைசல் சேர்க்கவும் • 94 லீற்றர் நீரில் கலந்து விசுறவும் • கட்டுப்படுத்தும் பூச்சிகள்

– அழுக்கணவன் – பச்சைத் தத்திகள் – வெண் மூட்டுப்பூச்சிகள் – பீடைப் புழுக்கள் – வெண் ஈக்கள் – மயிர்க் கொட்டிகள் – தண்டு துளைப்பான் (பீர்க்கு) – தக்காளி, கத்தரி;;; காய் துளைப்பான்கள்

சாணக் கரைசல் • சாணம் - 1 கி.கிராம் • நீர் - 10 லீற்றர் • இரண்டையும் நன்கு கலக்கவும் • சாக்கு அல்லது துணியால் வடிகட்டவும் • மீண்டும் 5 லீற்றர் நீர் சேர்த்து வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கவும் • கட்டுப்படுத்தும் நோய்கள்

 சேர்கன்போறா இலைப்புள்ளி  தக்காளி வாடல்  பழ அழுகல்  கத்தரி வாடல்  ஏல்ரனேறியா இலைப்புள்ளி  மிளகாய் வாடல்  கட்டுப்படுத்தும் பூச்சிகள்

– எப்பிலக்னா வண்டு – அவுலக்கபோரா – பூசணி வண்டு – காய் துளைப்பான்கள் • விதை தொற்று நீக்க • சாணக் கரைசல் - 500 மி.லீ , நீர் - 1 லீற்றர் • இரண்டையும் நன்கு கலக்கவும் • விதைகளையிட்டு ½ மணி ஊறவிடவும் • நிழலில் உலர்த்தவும் • விதைக்கவும் ஃ நடவும் • பக்ரீறியா, பூஞ்சணங்களைக் கட்டுப்படுத்த • 10 நாட்களுக்கு ஒரு தடவை 10மூ சாணக் கரைசலை 3 தடவை தெளிக்கவும் • ½ லீற்றர் சாணக் கரைசலுக்கு புளித்த மோருடன் 9 லீற்றர் நீரைச் சேர்த்து வாரத்திற்கு 2 தடவை தெளிக்கவும் • சாணம்: நீர் - 1:2 அளவில் கலந்து நாற்றுகளின் வேர்களை ½ மணித்தியாலம் அமிழ்த்திய பின் நடவும்

மாட்டுச் சலம் • மாட்டுச் சலத்தை 15 நாட்கள் மூடிய பாத்திரத்தில் வைக்கவும் • மாட்டுச் சலம் : நீர்- 1: 2 விகிதத்தில் கலந்து 1 கிழமை இடைவெளியில் 3 தடவை விசிறவும். • கட்டுப்படுத்தும் பூச்சிகள்

• வெண் முட்டுப்பூச்சி • பனிப்பூச்சி • அழுக்கணவன் • புழுக்கள் • சிற்றுண்ணி


சீமைக்கிழுவை (கிளிசீரிடியா) • சீமைக்கிழுவைப் பட்டை – 3 கை பிடி • உடைத்த சோளம் அல்லது அரிசி - 1 கை பிடி • கிளிசீரிடியா பட்டையைத் துவைக்கவும் • உடைத்த சோளம் அல்லது அரிசியுடன் கலக்கவும் • சோளம் அல்லது அரிசியை வேறாக்கவும் • கட்டுப்படுத்தப்படும் கொறிப்பான்கள் - எலி


மிளகாய்த்தூள் • மிளகாய்த்தூளை நீரை விட்டு நன்கு கலக்கவும் • 12 மணித்தியாலம் ஊறவிடவும் • துணியால் வடிக்கவும் • சவர்க்காரத்தை 5 லீற்றர் நீரில் கரைக்கவும் • மிளகாய் திரவத்தை அதனுள் விடவும் • நன்கு கலக்கி பயிர்களுக்கு விசிறவும் • கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள்

• எறும்பு • அழுக்கணவன் • இலையரி புழுக்கள்

• கட்டுப்படுத்தப்படும் நோய் • இலைச்சித்திர வடிவு வைரஸ் மு.கு : தயாரிக்கும் போதும் விசுறும் போதும் பாதுகாப்பு உடை அணியவும்

ஐந்திலைக் கரைசல் தயாரிப்பதற்கான தாவரத்தின் பண்புகள் • பால் வரக்கூடிய தாவரங்கள்- (எருக்களை, கள்ளி, காட்டாமணக்கு) • கசப்புத்தன்மையுடைய தாவரங்கள் - (வேம்பு, சீந்தில், தும்பை, சிறியாநங்கை) • கால் நடை மேயாத தாவரங்கள் - (ஆடாதோடை, காட்டாமணக்கு) • மணமுடைய தாவரங்கள் - (நொச்சி, துளசி, பப்பாளி) • பூச்சி நோய் தாக்காத தாவரங்கள் - (நுணா, காட்டாமணக்கு) • ஓவ்வொரு வகையிலும் ஒரு செடி • ஓவ்வொன்றிலும் 1 கி.கிராம் இலை • ஒரு ஏக்கருக்கு 5 கிலோ இலை போதும் • ஐந்திலைகளையும் உரலில் இடிக்கவும் • பெரிய மண் பானையில் இடவும் • இலையளவின் 2 மடங்கு நீர் விடவும் • 1 லீற்றர் சாணிக்கரைசல் இடவும் • 100 கிராம் பெருங்காயத்தூள் சேர்க்கவும் • பானை வாயை இறுக்கமாக மூடிக்கட்டவும் • பானையில் உள்ள கரைசலை தினமும் காலை, மாலை கலக்கவும் • ஒரு வாரத்தின் பின் 500 மி.லீ – 91ஃ2 லீற்றர் நீருடன் கலந்து விசுறவும். • சேமிப்புக் காலம் - 25-30 நாட்கள்